Mar 23

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவனின் ஆசை நிறைவேறியது

இரத்த புற்றுநோயுடன் போராடி வரும், ஐந்து வயது சிறுவனின் ஆசையை வாஹன் தீயணைப்பு படையினர் நிறைவேற்றியுள்ளனர்.

எதிர்காலத்தில் தீயணைப்பு வீரராக வரவேண்டுமென்ற ஆசைக்கொண்ட, ரொறொன்ரோவை சேர்ந்த மாற்றோ பாபா என்ற சிறுவனின் ஐந்தாவது பிறந்த நாளன்று, வாஹன் தீயணைப்பு படையினர் உணர்ச்சி பூர்வமான பரிசொன்றை வழங்கி இச்சிறுவனை மகிழ்வித்துள்ளனர்.

பிறந்த தினத்தன்று இச்சிறுவனின் வீட்டிற்கு சென்ற வாஹன் தீயணைப்புப் பிரிவின் தலைமை அதிகாரி லறி பென்ட்லி மற்றும் ஏனைய வீரர்கள் கொண்ட குழு, சிறுவனிற்கு சொந்தமாக தீயணைப்பு பிரிவினர் அணியும் தலைக்கவசமொன்றையும் சீருடையையும் பிறந்த நாள் கேக்கையும் வழங்கியதுடன் தீயணைப்பு வண்டியில் சிறுவனை பாடசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த உணர்ச்சிபூர்வமான சம்பவத்தை எண்ணி, மாற்றோ பாபாவின் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். பலரும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.