Mar 22

பேட்டரியில் இயங்கும் பைக் சார்ஜ் செய்யும் போது வெடித்துச் சிதறியது.

சென்னையில் பேட்டரியில் இயங்கும் பைக் சார்ஜ் செய்யும் போது வெடித்துச் சிதறியது.

சென்னை திருவான்மியூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன். அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ள இவர், பேட்டரியில் இயங்கும் பைக்கை பயன்படுத்தி வருகிறார். அதற்கு வழக்கம் போல சார்ஜ் செய்திருக்கிறார். அப்போது, திடீரென பயங்கர சத்தத்துடன் பைக் வெடித்து சிதறியது.

பைக் தீப்பற்றி எரிவதைப் பார்த்து உடனே சட்டென பரவிய தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுத்தனர்.

பேட்டரியை அதிக நேரம் சார்ஜ் செய்ததால் பைக் வெடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.