Mar 22

அமெரிக்காவை தொடர்ந்து பேஸ்புக் விசாரணையை ஆரம்பித்தது கனடா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் பணியாற்றிய நிறுவனத்தினால் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட குற்றச்சாட்டு குறித்து கனடாவும் விசாராணைகளை ஆரம்பித்துள்ளன.

கனடாவின் தனியுரிமை கண்காணிப்பு நிறுவனம் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

விசாரணைகளின் முதற்கட்டமாக கனேடிய பேஸ்புக் பயனாளர்களின் தரவுகள் இவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக விசாரிக்கப்படவுள்ளன.

தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு மற்றும் எலக்ட்ரானிக் ஆவணங்கள் சட்டம் (PIPEDA), கனடாவின் தனியார் தனியுரிமை சட்டம் ஆகியவற்றுக்கு பேஸ்புக் இணங்கியுள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகளின் போது கவனத்திற் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேஸ்புக் குறித்த விசாரணைகளை ஏற்கனவே அமெரிக்காவும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.