Mar 22

பிரான்ஸில் வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமை காலை வரை தொடரும்!

தொழில்துறை நடவடிக்கை காரணமாக, ஐரோப்பிய ஒன்றிய தொழிற்சங்க நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் படி அதிக நாட்கள் வேலை நடைபெறாத யூரோ நாடுகளில் பிரான்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் இன்று பல தொழிற் சங்கங்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதிலுமுள்ள 7 தொழிற் சங்கங்களின் பொதுத்துறை ஊழியர்களை இன்று வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் பள்ளி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் பாரிஸ் மெட்ரோ (RATP) தொழிலாளர்கள் அடங்குகின்றனர்.

அத்தோடு இந்த வேலை நிறுத்தத்தில் புகையிரத ஊழியர்களும் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தேசிய இரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். சர்வதேச ரெயில் பயணமும் கூட பாதிக்கப்படும். நான்கு ரயில்களில் மூன்று ரயில்கள் இயங்கும்.

வியாழக்கிழமை விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும். பாரிசின் மூன்று பிரதான விமான நிலையங்களில் (CDG, Orly and Beauvais) சுமார் 30 சதவீத விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பயணத் தடைகளுக்கு போக்குவரத்து அமைச்சர் எலிசபெத் போர்னே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குழந்தை பராமரிப்பு நிலைய ஊழியர்களும், மழலையர் பள்ளிகளும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக கல்வி அமைச்சர் Jean-Michel Blanquero தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தங்களைத் தவிர, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராக நாடு முழுவதும் 140 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

பாரிசில் உள்ள டி லா பாஸ்டிலில்(de la Bastille) மிகப்பெரிய மாநாடு நடைபெறும். மேலும் 25,000 மக்கள் இந்த மாநாட்டில் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வேலைநிறுத்தம் வியாழனிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வரை இடம்பெறும்.