Mar 22

கனடாவில் துப்பாக்கி பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை

மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த துப்பாக்கிப் பாவனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையொன்றை ஆளும் கனேடிய லிபரல் கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி துப்பாக்கிகளின் இருப்பு மற்றும் விற்பனை செய்யப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பான பதிவுகளை விற்பனை நிலையங்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கனடாவில் குற்றச் செயல்கள் குறைந்துள்ள போதிலும் துப்பாக்கிகளுடன் தொடர்பான கொலைக்குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.

கைத்துப்பாக்கிகள் மற்றும் ஆயுத பாவனையை கடினமாக்குவது தொடர்பாக கனேடிய லிபரல் கட்சி 2015ஆம் பிரசாரத்தின்போது உறுதியளித்திருந்தது. அதற்கமையவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் கனடாவில் துப்பாக்கி வன்முறைகள் குறைவு என்ற போதிலும், ஐரோப்பா உள்ளிட்ட சில மேற்குலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடாவில் துப்பாக்கி வன்முறைகள் அதிகமாகும்.