Mar 11

சர்வதேச வர்த்தக முயற்சிக்குபொதுநலவாய நாடுகள் சாதகமான சமிக்ஞை

பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் அங்குரார்ப்பண மாநாடு மார்ச் 9-10 திகதி லண்டனில் உள்ள லன்காஸ்டர் சபையில் நடந்தது. இலங்கை சார்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துக்கொண்டார்.

இவருடன்  அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் இணைந்துக்கொண்டார். 

 2018 ஆம் ஆண்டு  பிரிட்டனில் நடக்கவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட் டை முன்னிட்டே இந்தபொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின்  மாநாடு நடக்கிறது

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பற்றீசியாஸ்கொட்லாண்டுக்கும் இடையே சந்திப்பும் இடம்பெற்றது.

இதில் பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான திட்டங்களின்இலங்கை முன்னேற்றம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. 

பொதுநலவாய     இலங்கை வழங்கிவரும்  பங்களிப்பிற்குசெயலாளர் நாயகம்  நன்றி தெரிவித்ததுடன் இலங்கைக்கான வர்த்தக நிதி வசதி, தற்போது நடைமுறையில் உள்ளதிட்டங்களுக்கு பொதுநலவாய செயலகம் வழங்குவதற்கு ஆயத்தமாக இருக்கும் தொழில்நுட்ப உதவிகள் குறித்தும்கலந்தாலோசிக்கப்பட்டது.

 சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகள்இ பன்முகத்தன்மையான மூலோபாயத்தினை வடிவமைத்தல், ஏற்றுமதி இறக்குமதி வங்கி அமைப்பதற்கான ஆதரவு, பொதுநலவாய நாடுகள் மத்தியில் வர்த்தக ரீதியாக காணப்படும் சவால்கள் மற்றும் பல்துறைசார் வர்த்தகபிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.