Mar 21

அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.4,000 வரை தள்ளுபடி

சாம்சங் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அமேசான் இந்தியா வலைத்தளத்தில் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. நான்கு நாட்கள் நடைபெற இருக்கும் சாம்சங் கார்னிவல் விற்பனையில் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையில் ரூ.4,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அமேசான் பே ரூ.8,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் சலுகையில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை ரூ.59,900க்கு வாங்க முடியும்.

இதே போன்று கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு ரூ.4000 தள்ளுபடி வழங்கப்பட்டு வாடிக்கையாளர்கள் ரூ.28,990-க்கு பெற முடியும். கேலக்ஸி ஆன்7 பிரைம் 64 ஜிபி மாடல் ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.12,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி ஆன்7 பிரைம் 32 ஜிபி மெமரி மாடல் ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.10,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.2500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.6,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஆன்5 ப்ரோ ரூ.1500 குறைக்கப்பட்டு ரூ.6,490க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் பே கேஷ்பேக் சலுகையில் ரூ.8000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டிருப்பதோடு, எக்சேஞ்ச் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. சாம்சங் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி தொலைகாட்சி மற்றும் இதர மின்சாதனங்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்வு செய்யப்பட்ட தொலைகாட்சி மாடல்களுக்கு 35% வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 21-ம் தேதி துவங்கியிருக்கும் சாம்சங் கார்னிவல் சிறப்பு விற்பனை மார்ச் 24-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அமேசான் மற்றும் சாம்சங் வழங்கும் சலுகைகள் எந்நேரத்திலும் மாற்றப்படலாம்