Mar 21

மிகப்பெரிய மாற்றத்துடன் உருவாகும் சியோமி Mi மிக்ஸ் 2எஸ்

சியோமி Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனின் முன்பக்கம் செல்ஃபி கேமராவிற்கு பிரத்யேக நாட்ச் வழங்கப்பட்டிருக்கிறது. செல்ஃபி கேமரா ஸ்மார்ட்போனின் மேல்பக்கம் வழங்கப்படுவதை சியோமி உறுதி செய்துள்ளது. 

முந்தைய Mi மிக்ஸ் ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா, வித்தியாசமாக வைக்கப்பட்டிருந்தது. சியோமி சார்பில் பதிவிடப்பட்டு இருக்கும் டீசர்களில் ஸ்மார்ட்போனின் முன்பக்க வடிவமைப்பு முந்தைய மாடலை போன்று காட்சியளிக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் செல்ஃபி கேமராவுக்கென நாட்ச் வழங்கப்படாது என்றே தெரிகிறது.

இத்துடன் மார்ச் 27-இல் நடைபெற இருக்கும் Mi மிக்ஸ் 2எஸ் அறிமுக விழாவில் கலந்து கொள்வோரில் பத்து பேர் தேர்வு செய்யப்பட்டு பாரிஸ் நகருக்கு அழைத்து செல்லப்பட இருப்பதாக சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் தெரிவித்திருக்கிறார். வெய்போவில் பதிவிடப்பட்டு இருக்கும் புகைப்படங்களின் படி க்ரிஸ் வு Mi மிக்ஸ் 2எஸ் விளம்பர் தூதராக நியமிக்கப்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது.

சியோமி Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனின் கீழ் பக்க பெசலில் செல்ஃபி கேமரா, மற்றும் சென்சார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான வடிவைப்பு Mi மிக்ஸ் 2எஸ் பயனர்கள் செல்ஃபி எடுக்க ஸ்மார்ட்போனினை லேண்ட்ஸ்கேப் மோடில் வைக்க வேண்டும். இதே அம்சத்தை முந்தைய ஸ்மார்ட்போனில் பயனர்கள் குற்றஞ்சட்டியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வெளியான தகவல்களின் படி சியோமி Mi மகிஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் டிஸ்ப்ளே, 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 4400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட ஸ்லோ-மோ மோட், 4K தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதி, அதிவேக ஆட்டோஃபோகஸ் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ தகவல்களை அறிந்து கொள்ள சில காலம் காத்திருக்க வேண்டும்.