Mar 20

ஐபோன் X தோற்றத்தில் விவோ X21 ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று X21 டாப்-எண்ட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய விவோ ஸ்மார்ட்போன் 6.28 இன்ச் FHD பிளஸ் 19:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90.3% ஸ்கிரீன் அளவு, 1.66 மில்லிமீட்டர் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 4.0 மற்றும் குவால்காம் மூலம் இயங்கும் செயற்கை நுண்ணறிவு வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஸ்டான்டர்டு மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் என இருவித மாடல்களில் விவோ X21 வெளியிடப்பட்டுள்ளது.

டூயல் பிரைமரி கேமரா, சாம்சங் 2L9 சென்சார், டூயல் பிக்சல் தொழில்நுட்பம், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமரா, செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் பியூட்டி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 24 எம்.பி. தரமுள்ள புகைப்படங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விவோ X21 சிறப்பம்சங்கள்:

- 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி பிளஸ் 19:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்

- அட்ரினோ 512 GPU

- 6 ஜிபி ரேம்

- 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

- ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8

- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4

- 12 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0

- கைரேகை சென்சார் / இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி

- ஃபாஸ்ட் சார்ஜிங்

விவோ X21 ஸ்மார்ட்போன் பிளாக், அரோரா வைட் மற்றும் ரூபி ரெட் நிறங்களில் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 2989 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.29,870), 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் 3198 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.32,960), 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மாடல் 3598 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.37,085) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவோ X21 ஸ்டான்டர்டு மாடல் விற்பனை மார்ச் 24-ம் தேதியும், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடல் மார்ச் 28-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.