Mar 20

சுவிட்சர்லாந்தில் கண்ணாமூச்சி விளையாடும் வசந்த காலம்

பொதுவாக சுவிட்சர்லாந்தில் வசந்த காலம் எதிர்பார்க்கப்படும் நேரமாகிய மார்ச் மாதத்தின் இரண்டாம் பகுதி நெருங்கியும் நாட்டின் வட பகுதிகளில் வசந்த காலம்’வருவேனா மாட்டேனா’ என்று கண்ணாமூச்சி ஆட்டம் போடுகிறது.வார இறுதி நாட்கள் சில இடங்களில் பனி நிறைந்ததாகக் காணப்பட்ட நிலையில் சுவிட்சர்லாந்தில் பல இடங்களில் இன்னும் குளிரே நிலவுகிறது.

வெப்பநிலை இன்னும் உறைநிலைக்கு சற்று மேலேதான் உள்ளது.ஜெனிவாவில் 8 டிகிரி வரை எதிர்பார்க்கப்படும் நிலையில், சூரிச், Bern மற்றும் Basel ஆகிய நகரங்களில் 3 டிகிரி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே நேரத்தில் St.Gallenஇல் குளிர் -1 டிகிரியாக இருக்கும்.

வரும் வார இறுதிவரை வட சுவிட்சர்லாந்தில் குளிராகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இரவு நேர வெப்பநிலைகள் -3 முதல் -6 டிகிரிகள் வரை இருக்கும். செவ்வாய் முதல் வானம் தெளிவாகும். என்றாலும் மாதத்தின் அடுத்த பாதி குளிர்ச்சியாகவே இருக்கும் என கூறப்படுகிறது.