Mar 19

ஒன்டாரியோ துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக பலியான பெண்!

ஒன்டாரியோவின், நோர்த் யோர்க் பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவத்தின் போது அருகில் இருந்த வேறொரு பெண்ணும் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகியுள்ளார்.

நோர்த் யோர்க்கில் ‘போலிங்’ நிலையமொன்றில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 2 பேர் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ரூமா அமர் என்ற அப்பாவிப் பெண்ணே துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகியுள்ளார்.  அவர் 32 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

ரூமா அமர் தனது குடும்பத்தாருடன் சம்பவ இடத்தில் இருந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிதாரிகளின் இலக்கான தனா டியன் நிகோ, 32 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது. நிகோ, சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.