May 19

புருண்டியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் 3 பேர் பலி

புருண்டியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதல்களில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இனந்தெரியாத நபர் ஒருவர் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

புருண்டியின் தலைநகரில் இடம்பெற்றுள்ள இந்த  தாக்குதல் சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரையில் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையிலான மோதல்களில் 700 பேர் வரையில்  கொல்லப்பட்டுள்ளனர்.