Mar 11

த.தே.கூ.வின் எதிர்க்கட்சி பதவிக்கு ஆபத்து; கடிதத்தை தயாரிக்கிறது மகிந்த அணி

எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும்  எதிர்க்கட்சி பதவியையும்  பெற்றுக்கொள்ளவேண்டிய தேவையை   கூட்டு எதிரணி  நன்றாக   உணர்கிறது. 

கூட்டு எதிரணியை  பிரதான எதிர்க்கட்சியாக அங்கீகரிக்குமாறு கோரி  சபாநாயகருக்கு மீண்டும்  நாங்கள்  கடிதம் எழுதவிருக்கின்றோம் என்று  பாராளுமன்ற அமர்வுகளிலிருந்து  ஒருவாரத்திற்கு இடைநிறுத்தப்பட்ட கூட்டு எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 52 உறுப்பினர்களைக் கொண்டுள்ள எமக்கு  பிரதான  எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவேண்டும். உலகில்  10 வீதத்திற்கு குறைந்த எம்.பி.க்களைக் கொண்ட எந்தக்கட்சிக்கும்    எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை.

ஆனால் இலங்கையில்  வெறுமனே 16 எம்.பி.க்களைக் கொண்டுள்ள  தமிழ் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.