May 19

வழக்கம் போல் மாணவர்களை முந்திய மாணவிகள்

இன்று வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 94. 4 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.2 சதவீத மாணவிகளும், 92.5 சதவீத மாணவர்களும், மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய 10 லட்சத்து 38 ஆயிரம் பேரில் 9 லட்சத்து 26 ஆயிரத்து 711 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட மொத்த தேர்ச்சியில் 0.8 சதவீதம் கூடுதல் தேர்ச்சி ஆகும். திருநங்கை ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.

5,059 பள்ளிகள் முழு அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

100க்கு 100 எத்தனை பேர் ?

1, 557 அரசு பள்ளிகள் முழு அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 98.54 சதவித தனியார் பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 13,759 பேரும், அறிவியலில் 17, 481 பேரும், சமூக அறிவியலில் 61,115 பேரும், தமிழில் 69 பேரும் 100 க்கு 100 பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை. 

481 மதிப்பெண்ணுக்கு மேல் 38,613 மாணவ, மாணவிகள் எடுத்துள்ளனர். 450 முதல் 480 மதிப்பெண்கள் வரை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 757 பேர் எடுத்துள்ளனர்.