Mar 16

இனியும் சுவிட்சர்லாந்தை கருப்புப் பணத்துடன் இணைத்துப் பேச வேண்டாம்: சுவிஸ் தூதர்

இனியும் சுவிட்சர்லாந்தை கருப்புப் பணத்துடன் இணைத்துப் பேச வேண்டாம் என இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து தூதர் Andreas Baum கூறியுள்ளார்.தமிழகத்தின் கோயம்புத்தூரில் CAPAcities என்னும் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் தொடர்பான பல திட்டங்களை த் தொடங்கி வைப்பதற்காக இந்தியா வந்தவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் எத்தனைபேர் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார்கள் என்பது குறித்த தகவல்களை ஜனவரி மாதம் முதலே சேகரிக்கத் தொடங்கிவிட்டதாகவும் 2019ஆம் ஆண்டு அந்தப் பட்டியல் இந்திய அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுவிஸ் அரசும் இந்திய அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இப்பணி தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தப்படி வரி தொடர்பான விடயங்கள் தானாகவே பரிமாரிக்கொள்ளப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தகவல் பரிமாற்றம் விரைவில் தொடங்கவிருப்பதாகவும், வரி ஏய்ப்பாளர்கள் குறித்த பட்டியல் அனைத்து நாட்டவருக்கும் கிடைக்கும் வகையில் ஆவன செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதே நடைமுறையை உலகின் அனைத்து நாடுகளுக்கும் மேற்கொள்ள இருப்பதாகவும் சுவிட்சர்லாந்து தூதர் தெரிவித்தார்.

பின்னர் இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே உள்ள உறவு குறித்து கருத்து தெரிவித்த சுவிட்சர்லாந்து தூதர் Andreas Baum, “ஏற்கனவே இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் சீதோஷ்ணம், சுற்றுச்சூழல், அறிவியல், தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இணைந்து செயலாற்றி வருகின்றன. இரு நாடுகளுக்குமிடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது” என்றார்.