Mar 16

இந்திய வரைபடத்தில் தவறு: சர்ச்சைக்கு விளக்கமளித்த கனடா அரசு

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கனடா பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்திய வரைபடம் தவறுதலா இடம்பெற்றிருந்ததாக எழுந்த சர்ச்சைக்கு கனடா அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிப்ரவரி 24ஆம் திகதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது அங்கிருந்த இந்திய வரைபடத்தில் தவறு இருந்தால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், சீனா ஆக்கிரமிப்பு பகுதியான அக்ஷய் சின், மற்றும் குஜராத் மாநிலம் ஆகியவை தவறுதலாக இடம் பெற்றிருந்தது.எனவே இந்த விடயத்தை கனடா அரசின் கவனத்துக்கு இந்திய அரசு எடுத்துச் சென்றது.

இதற்கு விளக்கம் அளித்த கனடா அரசு, மூன்றாம் தரப்பால் குறித்த நிகழ்ச்சி ஏற்பாது செய்யப்பட்டிருந்தது, கனடா அரசு ஏற்பாடு செய்யவில்லை, இந்திய வரைபடம் தவறுதலாக இடம்பெற்றிருந்ததை கனடா ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.இந்த தகவலை இந்திய வெளியுறவுதுறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் தெரிவித்துள்ளார்.