Mar 16

அமெரிக்காவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட கனடிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை?

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்வதற்கான சதித் திட்டத்தினை தீட்டிய கனடிய இளைஞருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கும் வகையிலான ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரசு தரப்பில் வாதாடி வரும் வழக்கறிஞர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நியூ யோர்க் டைம் சதுக்கம், தொடரூந்து நிலையம், நிகழ்வு மண்டபம் ஆகியவற்றின் மீது குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகம் ஆகியவற்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தற்போது, 20 வயதான மிசிசாகாவைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் எல் பாஹ்நஸாவி என்ற இளைஞரும் தன் மீதான அந்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.