Mar 14

வெளிவந்தது “புதிய சுதந்திரன்” யாழ் மண்ணிலும்!!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன்” பத்திரிகை வெளியீடு இன்று 14ஆம் திகதி புதன்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமாகிய சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் புதிய சுதந்திரன் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் எம். அகிலனிடம் இருந்து பத்திரிகையின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களுக்குப் பிரதிகளை வழங்கி வெளியிட்டு வைத்தார்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோரும், உலகத் தமிழர் பேரவையின் தவைவர் இம்மானுவல் அடிகளார், தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா மற்றும் இந்து, இஸ்லாமிய மதகுருமார், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ப பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பல நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.