Mar 14

வாட்ஸ்அப் டெலீட் புது அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் அதிக எதிர்பார்ப்புடன் வழங்கப்பட்ட டெலீட் அம்சம் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். 2.18.31 வெர்ஷனில் வாடிக்கையாளர்கள் அனுப்பிய குறுந்தகவல்களை 1 மணி நேரம் 8 நிமிடங்கள், 16 நொடிகளில் அழிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய ஸ்டேபிள் பில்டு பதிப்புகளில் இந்த அம்சம் குறுந்தகவல் அனுப்பிய ஏழு நிமிடங்களுக்குள் அதனை அழிக்க வழி செய்தது. வாட்ஸ்அப் பீட்டாவில் சோதனை செய்யப்பட்ட புதிய அம்சத்திற்கான அப்டேட் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ்-இல் வழங்கப்படும் புதிய அப்டேட், பயனர் வரவேற்பை பொருத்து ஆண்ட்ராய்டில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்கும் வசதி முதல்முறையாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. இந்த அம்சம் ஜிமெயிலின் அன்டூ சென்ட் (Undo Send) அம்சம் போன்றே வேலை செய்கிறது, எனினும் வாட்ஸ்அப்பில் வாடிக்கையாளர்கள் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது.அனைவருக்கும் அழிக்கும் வசதி என்றாலும், குறுந்தகவல்களை அனுப்புவோருக்கு மட்டும் அழிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் வாட்ஸ்அப் செயலியில் பிளாக் ரிவோக் ரிக்வஸ்ட் (Block revoke request) எனும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் பயனர் அனைவருக்கும் குறுந்தகவல்களை அழிக்க முயலும் போது குறுந்தகவல் அனுப்பும்.

இந்த அம்சம் அனைவருக்கும் அழிக்கப்படும் குறுந்தகவல்கள் 24 மணி நேரத்திற்குள் இருப்பதை உறுதி செய்யும். அந்த வகையில் 24 மணி நேரத்திற்கு பின் அனைவருக்கும் அனுப்பப்படும் குறுந்தகவல்களை சட்ட விரோதமாக அழிக்க முடியாது.

முன்னதாக வாட்ஸ்அப்பில் அனைவருக்கும் குறுந்தகவல்களை அழிக்கக் கோரும் அம்சமானது ரிக்வஸ்ட் ஐடி மற்றும் மெசேஜ் ஐடி ஒன்றாக இருப்பதை உறுதி செய்து குறிப்பிட்ட குறுந்தகவல்களை அழிக்கும். புதிய வெர்ஷன்களில் ரிவோக் ரிக்வஸ்ட்களுக்கான நேரம் 24 மணி நேரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் குறுந்தகவல்களை அழிக்கும் முன் ரிக்வஸ்ட் ஐடியுடன் மெசேஜ் தேதியை உறுதி செய்கிறது.