Mar 14

பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மி உருவம் மனிதனல்ல

தென் அமெரிக்க நாடான பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று விரல் கொண்ட மனித உருவம் மனிதனே அல்ல என்று ரஷ்ய விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

பெருவின் மலைப்பகுதியில் மெக்ஸிகோ பத்திரிகையாளர் ஜெமி மவுஸன் என்பவரால் கடந்த ஆண்டு பதப்படுத்தப்பட்ட மனித உருவம் கொண்ட உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கால் மற்றும் கைகளில் நீளமான 3 விரல்கள் மட்டும் கொண்ட அந்த உருவம், அமர்ந்த நிலையில் இருந்தது.

இந்த உடல் குறித்து ரஷ்யாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் கான்ஸ்டன்டன் கோரட்கோவ் ஆய்வு நடத்தி வந்தார். அந்த உருவத்தின் டி.என்.ஏ சோதனையில் அந்த உருவம் மனிதன் அல்ல என்றும் ஆனால் வேற்றுக் கிரகவாசியா என்பது குறித்து சரியாக கண்டறியமுடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பெரும்பாலான விஞ்ஞானிகள் இதனை ஒரு புரளி என்று நிராரித்துள்ளனர். இந்த மம்மி தொடர்பில் வேற்று கிரக வாசிகள் பற்றி கூறிவரும் சதி கோட்பாட்டாளர்களே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.