Mar 14

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூல்? : மதிமுக கண்டனம்

மாமல்லபுரத்தில் பலமுனை கட்டண வசூல் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாமல்லபுரத்தில் சிற்பங்களை  நம்மிடமிருந்து தொல்லியல் துறை கைபற்றியது. 1996ம் ஆண்டு ஒருவருக்கு ஐந்து ரூபாய் என கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர்.

2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் வெளிநாட்டவர்களுக்கு 500 ரூபாய், இந்தியர்களுக்கு 30 ரூபாய் என உயர்த்தினர். அதனால் பலமுனைக் கட்டண வசூல் கொள்ளைகளால் நரக வேதனை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டண உயர்வு, நான்கு சுங்கச்சாவடிகள் செயல்பாட்டை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.