Mar 13

கண்டி கலவரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன போராட்டம்

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளைக் கண்டித்து யாழில் கண்டன போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.

யாழ்.பிரதான பேருந்து நிலையத்துக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில்

சமூக மேம்பாட்டு இணையம், பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு, புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி ஆகியன ஆதரவு வழங்கின.