Mar 13

நெடுங்கேணி மக்களிற்கும் நாட்டின் ஏனைய மக்களிற்கு கிடைக்கும் அதே நன்மையை வழங்குக

நாடுமுழுவதும் யாணைக்கான பாதுகாப்பு வேலிகள் மக்கள் குடியிருப்பு மற்றும் வாழ்வாதார நிலங்கள் உள்ளிட்ட கிராமத்தினை சுற்றி பாதுகாப்பு வேலி அமைககும் நிலையில் நெடுங்கேணியில் தமிழர் வாழ்விடங்களில் மட்டும் குடியிருப்பு பிரதேசத்திற்கு மட்டும் பாதுகாப்பு வேலிகள் அமைப்பதனால் வாழ்வாதாரம் இன்றி மக்கள் திணறுவதாக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

வவுனியா மாவட்டம் வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் கூழுக்கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் எந்தவொரு இணைத் தலைவர்களும் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் மாகாண அமைச்சர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்ற நிலையில் பிரதேச செயலாளர் பரந்தாமன் தலமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் திணைக்கள அதிகாரிகளுடன் மாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம் , இந்திர்ராயா ஆயோர் கலந்துகொண்டனர்.

இக் கலந்துரையாடலில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் பிரகாரம் நாடுமுழுவதும் யாணைக்கான பாதுகாப்பு வேலிகள் மக்கள் குடுயிருப்பு மற்றும் வாழ்வாதார நிலங்கள் உள்ளிட்ட கிராமத்தினை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக கும் நிலையில் நெடுங்கேணியில் தமிழர் வாழ்விடங்களில் மட்டும் குடியிருப்பு பிரதேசத்திற்கு மட்டும் பாதுகாப்பு வேலிகள் அமைப்பதனால் வாழ்வாதாரம் இன்றி மக்கள் திணறுகின்றனர். ஆனால் அருகில் உள்ள பொபஸ்வேவா சிங்களக் கிராமத்திற்கு மட்டுமன்றி நாட்டில் யாணைத் தாக்கம் உள்ள அனைத்து இடங்களிலும் கிராம்ம் முழுமையாகவே பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.்ஏன் இந்தப்பாகுபாடு எனவே நெடுங்கேணி மக்களிற்கும் நாட்டின் ஏனைய மக்களிற்கு கிடைக்கும் அதே நன்மையை வழங்குமாறு மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் கோரினார்.

இந்த ஆண்டில் யாணைப் பாதுகாப்பு வேலிக்காக எந்த நிதி ஒதுக்கீடும் கிடையாது அதனால் வேட்டுமானல் அதற்குரிய உபகரணங்கள் அனைத்தையும் பிரதேச செயலகம் ஊடாக வழங்க முடியும் கிராம அபிவிருத்திச் சங்கம் ஊடாக வேலிகளை கூலி இன்றி அமைக்குமாறு ஓர் யோசணை முன்வைக்கப்பட்டவேளையில் குறித்த பணி நீண்டநாட்களையுடையது என்பதால் மேற்படி நோசணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உடன் உரிய அமைச்சுடன் தொடர்பு கொண்டு நிதியை பெற்று யாணைப் பாதுகாப்பு வேலி அமைக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இதேபோன்று கனகராயன்குளம் பகுதியில் வடக்கு மாகாண நீர.ப்பாசணத் திணைக்களத்திற்காக யுத்தத்திற்கு முன்னர் அமைத்த கட்டிடத்திலேயே போரின் பின்பு பொலிசார் நிலைகொண்டிருந்தனர். இதனுடன் அருகில் இருந்த கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடம் உட்பட மொத்தமாக 3 ஏக்கர். நிலப்பரப்பினை வைத்திருந்த நிலையில் புதிய பொலிஸ் நிலையம் அமைக்க 4 ஏக்கர் நிலம் 2016ல்  வழங்கப்பட்டது. இருப்பினும் இன்றுவரை நீர.ப்பாசணத் திணைக்களத்தின் கட்டிடத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர். குடியிருப்பதோடு அபிவிருத்திச் சங்க கட்டிடம் பொலிசாரின் விளையாட்டுத் திடலாகவுள்ளது. எனவே இவற்றினை பொலிசார் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டம் முழுமையாக உள்ள பிரச்சணையாகிலும் நெடுங்கேணிப் பகுதியில் காணிவிநியோகப் பிரச்சணைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டதனால் பிரதேசத்தில் காணி எவருக்கு விநியோகிப்பதானாலும் பிரதேச காணிப் பயன்பாட்டுக் குழுவின் தீர.மானத்தின் பின்னர்  மாகாண காணி அமைச்சின் அனுமதி பெற்றே வழங்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சணையாக இனம்கானப்பட்ட மக்களின் நிலங்களை வனவளத் திணைக்களம் உரிமைகோரி எல்லையிடப்பட்டதனால் பாதிக்கப்படும் மக்களிற்கான தீர்வாக ஒரு மாத காலத்திற்கும் வனவளத் திணைக்களம் , பிரதேச செயலாளர.  நிலளவைத் திணைக்களம் என்பன நேரில் ஆராய்ந்து அளவீடு செய்து பிரதேச செயலாளரினால் மக்களின் காணிகள் என உறுதிப்படுத்தும் நிலங்கள் மக்கிளற்கு உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். எனவும் தீர்மானிக்கப்பட்டது.