Mar 13

அதிரடி அம்சங்களுடன் தயாராகும் நோக்கியா 9

ஹெச்.எம்.டி குளோபல் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் ஐந்து புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்த நிலையில், நோக்கியா 9 விரைவில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.நோக்கியா ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் ஹெச்.எம்.டி. குளோபல் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் ஐந்து புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்தது. 

நோக்கியா 1 பட்ஜெட் ஸ்மார்ட்போன் முதல் நோக்கியா 8 சிரோக்கோ பிரீமியம் ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி வசதி கொண்ட நோக்கியா 8110 மொபைல் போன்களை அறிமுகம் செய்த ஹெச்.எம்.டி. குளோபல் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யாமல் சஸ்பென்ஸ் வைத்துவிட்டது. 

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் மற்றொரு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக நோக்கியா 9 இருக்கலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. அதன்படி ஃபிளாக்ஷிப் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், ஐபோன் X போன்று முன்பக்கம் நாட்ச் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

முன்பக்கம் நாட்ச் வழங்கப்படும் பட்சத்தில் இதுவரை வெளியாகியுள்ள நோக்கியா ஸ்மார்ட்போன்களை விட புதிய ஸ்மார்ட்போனி்ல் மிகவும் மெல்லிய பெசல்கள் இடம்பெறலாம். இதுமட்டுமின்றி இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் முதல் நோக்கியா ஸ்மார்ட்போனாகவும் இது இருக்கலாம்.உலகில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் முதல் ஸ்மார்ட்போனாக விவோ X20 பிளஸ் UD இருக்கிறது. இத்துடன் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே பகுதி நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இம்முறை வெளியாகி இருக்கும் தகவல்கள் ஏற்கனவே நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனின் நிறங்களை சரியாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் முன்பக்கம் நாட்ச் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இவை வெறும் ப்ரோடோடைப் தான் என்றும் சில தகவல்கள் தெரிவித்துள்ளன. இத்துடன் நோக்கியா-பவர்-யூசர் வெளியிட்டிருக்கும் தகவல்களி்ல் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை ஹெச்.எம்.டி. குளோபல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், ஐந்து கேமரா செட்டப் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா செட்டப் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.