Mar 13

யாழ். சாவகச்சேரி பகுதியில் , தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகளும் வெடிமருந்துகளும்

யாழ். சாவகச்சேரி டச்சுவீதி, மருதடி பகுதியில் இன்றைய தினம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகளும் சீ4 என்ற வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரிப் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக நிலம் அகழப்பட்டபோது குறித்த சீருடையும், வெடிமருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் பொலிஸார் அவற்றை மீட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.