Mar 12

இணைத்தலைவர்கள் இல்லாத ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்!!

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று காலை பிரதேச செயலர் க. பரந்தாமன் தலைமையில் ஆரம்பமானது.

இன்றைய கூட்டத்துக்கு இணைத்தலைவர்கள், பெரும்பாலன திணைக்களங்களின் பணிப்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனால் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், ம. தியாகராசா, பொலிஸார். பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கதிரைகள் பல வெறிச்சோடிக்காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.