Mar 09

டீ விற்று மாதம் 12 லட்சம் சம்பாதிக்கும் அதிசயம்

புனேவைச் சேர்ந்த டீ கடைக்காரர் ஒருவர் மாதம் தோறும் ரூ.12 லட்சம் சம்பாதித்து அசத்துகிறார்.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் அமைந்துள்ளது ’யவ்லே டீ ஹவுஸ்’ (Yewle Tea house) என்ற டீக்கடை. 4 வருட ஆய்வுக்குப் பின் இந்தக் கடையைத் தொடங்கப்பட்டதாம்.

டீ குடிப்பவர்கள் நிறைய பேர் இருப்பதால் அவர்களை முழுமையாகச் சென்றடைய திட்டமிட்டு தொழிலைத் தொடங்க வேண்டும் என்று நினைத்ததாக டீக்கடையின் நிறுவனர்களில் ஒருவர் நவ்நாத் யெவ்லே சொல்கிறார்.

புனேயில் மட்டும் 3 கிளைகள் திறந்துவிட்டார்கள். ஒரு கடையில் 12 பேர் வேலை செய்கிறார்கள். ஒவ்வொரு கடையிலும் தினமும் 4000 பேர் டீ குடிக்கிறார்கள். இந்தக் கடைகள் மூலம் மாத வருமானம் ரூ.12 லட்சம் கிடைக்கிறதாம்.