Mar 07

பொன் சிவகுமாரன் அவர்களின் 44ஆம் நினைவு ஆண்டில் நடாத்தப்பட்ட உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி!

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 44ஆம் நினைவு ஆண்டில் நடாத்தப்பட்ட உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி.தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதல் தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 44ஆம் ஆண்டின் நினைவுகளை சுமந்து சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் 04.03.2018 அன்று Rotkreuz (Zug) என்னும் இடத்தில் உள்ளரங்க  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டது.காலை 9.30 மணியளவில் மலர் வணக்கம் செலுத்தி  அக வணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்தினைச் சேர்ந்த 17 அணிகளின் விறுவிறுப்பான ஆட்டத்தினாலும், வீரர்களின் சுறுசுறுப்பான விளையாட்டினாலும் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

இவ்வுள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலாம் இடம் Young Star Lyss அணியினரும், இரண்டாம் இடம் Limmathal Baden அணியினரும் மற்றும் மூன்றாம் இடம் Tamil United அணியினரும் பெற்றுக்கொண்டனர்.அத்துடன் சிறந்த பந்துகாப்பாளர்  ஆறுமுகம் சந்தோஸ் (Young Star Lyss) அவர்களும், சிறந்த விளையாட்டு வீரராக  இராவிந்திரராஜா சிந்துஜன்  (Limmathal Baden) அவர்களும் மற்றும் சிறந்த ஆட்டநாயகனாக செல்லத்துரை நிசாந்தன் (Young Star Lyss) அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

போட்டிகள் காலை 10:00 மணியளவில் ஆரம்பமாகி மாலை 19:00 மணியளவில் நிறைவு பெற்றன.