Mar 03

மலிவு விலையில் சியோமி ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்

சியோமி நிறுவனம் 43 இன்ச் மற்றும் 49 இன்ச் 1080 பிக்சல், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் 4K ஹெச்.டி.ஆர். டி.வி. மாடல்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இத்துடன் அறிமுகமான 32 இன்ச் Mi டி.வி. 4A மற்ற மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

ஜனவரி மாதத்தில் அந்நிறுவனம் 50 இன்ச் 4K HDR டி.வி. மாடலினை அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்சமயம் புத்தம் புதிய 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டி.வி. மாடலை சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் Mi டி.வி. 4A சீரிஸ் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீப் லேர்னிங் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்து இயங்கும் பேட்ச்வால் அம்சம் கொண்டிருக்கிறது. இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் அதிகம் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சிகளை அவர்களுக்கு பரிந்துரைக்கும் வசதி கொண்டது. 

இத்துடன் டால்பி, டி.டி.எஸ். ஆடியோ வசதி மற்றும் பல்வேறு அம்சங்கள் நிறைந்த Mi ரிமோட் கண்ட்ரோல் கொண்டுள்ளது. இது இன்ஃப்ராரெட் மற்றும் ப்ளூடூத் சார்ந்து இயங்குகிறது. இத்துடன் குரல் அங்கீகார வசதி வழங்கப்பட்டு இருப்பதால், குரல் மூலமாகவும் இயக்க முடியும். சியோமி Mi டி.வி. 4A 40-இன்ச் சிறப்பம்சங்கள்:

- 40- இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே

- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் L962-H8X கார்டெக்ஸ்-A53 பிராசஸர்

- மாலி-450 MP3 GPU

- 1 ஜிபி ரேம்

- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி

- MIUI டி.வி. சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்

- வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2 LE, 2 x HDMI, AV, 2 x யு.எஸ்.பி, ஈத்தர்நெட்

- H.263, H.264, H.265, MPEG1 / 2/4 வசதி

- 2 x 8 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / DTS- ஹெச்.டி. ஆடியோ டூயல் டீகோடிங்

சியோமி Mi டி.வி. 4A 40 இன்ச் மாடல் 1699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.17,450) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில் சீனாவில் இதன் விற்பனை மார்ச் 6-ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டி.வி. கட்டணத்தில் இருந்து 100 யுவான் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.