May 18

எவரெஸ்ட்டில் 4வது முறையாக ஏறிய இந்திய பெண் அன்சு

அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த மலை ஏறும் வீராங்கணை அன்சுஜாம்சென்பா. கடந்த 6 ஆண்டுகளில் 4வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

அருணாச்சால பிரதேசம் பொம்டிலா நகரை சேர்ந்த பெண் அன்சுஜாம்சென்பா. (வயது 32). இவருக்கு டீன் ஏஜ் வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு மே.12ந்தேதி, இவர் முதல் முறையாக உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் ஏறினார். 10 நாள் இடைவௌியில் இவர் மீண்டும் எவரெஸ்ட் உச்சிக்கு சென்றார்.

அதன்பின் கடந்த 2013ம் ஆண்டு மே.18ந்தேதி 3வது முறையாக எவரெஸ்ட் உச்சிக்கு சென்றார். தற்போது அவர் 4வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இவரின் சாதனையை அருணாச்சல முதல்வர் பீமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.