Mar 02

பிரான்சில் கடும் பனிப்பொழிவு: 58 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை

பிரான்சில் கடும் குளிரும், பனிப்பொழிவும் இருந்து வருவதால் 58 மாவட்டங்களுக்கு நேற்று செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளில் இந்த வாரம் கடுமையாக பனிப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் நேற்று 58 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நேற்று பாரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் மற்றும் நாடு முழுவதும் -6°C குளிரில் இருந்து -12°C வரை நிலவி வருகிறது எனவும், மலை பிரதேசங்களில் -20°C வரை உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இன்றும் மேலும் நிலைமை மோசமாகும் எனவும், பனி மழை பெய்யும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.