May 18

புத்தம் புது அம்சங்களுடன் களமிறங்க உள்ள ஹுவாய் ஹானர் ஹோலி 9..!

ஹுவாய் நிறுவனத்தின் ஹானர் ஹோலி 9 ஸ்மார்ட் போன், வரும் மே 27-ஆம் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது.

ஏற்கனவே இந்த நிறுவனம் வெளியிட்ட ஹானர் ஹோலி 8 ஸ்மார்ட் போன், இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ஹானர் ஹோலி 9 ஸ்மார்ட் போனை களமிறக்க ஹுவாய் நிறுவனம் தயாராக உள்ளது.5.2 இன்ச் திரை,ஆக்டோ கோர் ஹை சிலிகான் கிரி 960 பிராசசர்,மாலி ஜி.பி.யு, 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ராம்,32 ஜிபி மற்றும் 64 ஜிபி நினைவகம்,ஆண்ட்ராய்டு நெளகட் 7.1 இயங்குதளம்,விரைவாக சார்ஜ் ஏறக்கூடிய லித்தியன் அயர்ன் பேட்டரி போன்ற சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட் போன் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் போன் மே 27-ஆம் தேதி விற்பனைக்கு வருவதால், இதன் மற்ற சிறப்பம்சங்கள் குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. மே 27-ஆம் தேதி ஜெர்மனியில் இந்த ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் விலை இந்திய மதிப்பில் 25,000 ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.