Mar 02

நான்கு நாள் பயணமாக பிரான்ஸ் அதிபர் மார்ச் 9-ல் இந்தியா வருகை

நான்கு நாள் பயணமாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரான் மார்ச் 9-ம் தேதி இந்தியா வருகிறார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரான் ,மார்ச்9ம் தேதி நான்கு நாள் பயணமாக இந்தியா வருகிறார். மார்ச் 10-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

அப்போது இருதரப்பு பரஸ்பரம் ஒத்தழைப்பு பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். ஜெய்தாபூர் அணுமின்நிலையம் குறித்த இரு நாடுகளிடையே ஒப்பந்தம் ஏற்பட உள்ளது. இவ்வாறு அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.