Mar 01

தமிழர்கள் பொதுவான கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்!

பொதுக்­கொள்கை ஒன்­றின் அடிப்­ப­டை­யில் தமிழ்க்­கட்­சி­கள் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டு­மென ரெலோ அமைப்­பின் தலை­வர் விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு தமிழ்க் கட்­சி­க­ளி­ட­மி­ருந்து சாத­க­மான பதி­லெ­து­வும் இது­வரை தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

ரெலோ கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கின்­ற­தொரு கட்­சி­யா­கும். இந்­தக் கட்­சியை விட புளொட், இலங்­கைத் த­மி­ழ­ர­சுக்­கட்சி ஆகி­ய­ன­வும் அந்த அமைப்­பில் இணைந்து செயற்­ப­டு­கின்­றன.

முன்­னர் கூட்­ட­மைப்­பு­டன் இணைந்து செயற்­பட்ட தமிழ்க் காங்­கி­ரஸ்,

ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகி­யவை தற்­போது தனி வழி­யில் பய­ணிக்­கின்­றன. உள்ளூராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் தமிழ்க் காங்­கி­ர­சுக்கு சற்று உற்­சா­கத்­தை­யும், ஈ.பி ஆர். எல்.எவ் வுக்கு ஏமாற்­றத்­தை­யும், அளித்­து­விட்­டது.

கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அர­சின் வரவு செல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்­கி­ய­தால் அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் இரண்டு கோடி ரூபா வழங்­கப்­பட்­ட­தாக ஈ.பி ஆர். எல்.எப் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் குற்­றம் சாட்­டி­யி­ருந்­தார்.

உள்­ளு­ராட்­சித் தேர்­தல் வேளை­யில் இந்­தக் குற்­றச்­சாட்டை முற்­றா­கவே கூட்­ட­மைப்­பி­னர் மறு­த­லித்­த­னர். குறித்த குற்­றச்­சாட்­டுத் தொடர்­பான உண்­மை­களை மக்­க­ளி­டம் எடுத்­துக் கூறி­னார்­கள். மக்­க­ளும் அதை ஏற்­றுக் கொண்­டார்­கள்.

வேண்­டு­மென்றே கூட்­ட­மைப்பு 

மீது பொய்க் குற்­றச்­சாட்டு

இந்த விட­யம் தொடர்­பாக நாடா­ளு­மன்­றத்­தில் உரை­யாற்­றிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ சர­வ­ண­ப­வன், இது தொடர்­பா­கச் சபா­நா­ய­க­ரின் கவ­னத்­தை­யும் ஈர்த்­துக்­கொண்­டார். இறு­தி­யில் சிவ­சக்தி ஆனந்­த­னைச் சபா­நா­ய­கர் கண்­டிக்­கும் அள­வுக்கு நிலமை பார­தூ­ர­மா­ன­தாக ஆகி­விட்­டி­ருந்­தது.

தவ­றான தக­வல்­க­ளைத் தெரி­விப்­ப­தால் ஏற்­ப­டு­கின்ற எதிர்­வி­ளை­வு­களை ஈ பி ஆர் எல் எப் கட்­சி­யி­னர் இப்­போ­தா­வது உணர்ந்­தி­ருப்­பார்­கள். உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் அவர்­க­ளுக்­குக் கிடைத்த படு­தோல்வி அவர்களைச் சிந்­திக்க வைத்­தி­ருக்­கு­மென நம்­ப­லாம்.

இந்த நிலை­யால் கூட்­ட­ மைப்­பில் மீண்­டும் இணை­வ­தற்கு ஈ .பி .ஆர்.எல்.எப் முயற்சி செய்­வ­தாக ஒரு செய்தி தெரி­விக்­கின்­றது. அது மட்­டு­மல்­லாது உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளில் வெளி­யில் இருந்து ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு அந்­தக்­கட்சி தயா­ராக இருப்­ப­தாக அதன் தலை­வ­ரான சுரேஷ் பிரே­மச்­சந்­தி ­ரன் தெரி­வித்­துள்­ளமை கவ­னத்­துக்­கு­ரி­யது. அவர் தமது முன்­னைய நிலைப்­பாட்­டில் இருந்து சற்­றுக் கீழே இறங்கி வந்­தி­ருக்­கின்­றார்.

கர்­வப்­போக்­கு­டன் செயற்­பட்டு வந்த 

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலை­வர்

சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் கூட்­ட­மைப்­பு­டன் முரண் ப­டும்­போ­தெல்­லாம் அவ­ரைத் தம்­மு­டன் பேச வரு­மாறு கூட்­ட­மைப்­பின் தலை­வர் அழைப்­பது வழக்­க­மா­கக் காணப்­பட்­டது. அனால் ஈ .பி. ஆர் .எல் .எப் இன் தலை­வர் , கூட்­ட­மைப்­பின் தலை­வ­ருக்கு மதிப்­புக் கொடுக்­காது புறக்­க­ணிப்­ப­தையே வழக்­க­மா­கக் கொண்­டி­ருந்­தார்.

ஆனால் சம்­பந்­தன் இதைக் கவ­னத்­தில் கொள்­வ­தில்லை. ஒரு தலை­வ­ருக்கான பண்­பு­டன் அவர் நடந்து கொண்­டார். இதே­வேளை ரெலோ­வின் அழைப்­புக்கு தமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­ட­ மி­ருந்­தும் இது­வரை சாத­க­மான பதில் கிடைக்­க ­வி்ல்லை. இதை முன்­னரே எதிர்­பார்த்ததாக ரெலோ­வின் முக்­கி­யஸ்­த­ரான சிறி­காந்தா கூறி­யுள்­ளார்.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­க­ளால் ஏற்­பட்ட உற்­சாக நிலை­யி­லி­ருந்து கஜேந்­தி­ர­கு­மார் மீண்­ட­தா­கத் தெரி­ய­வி்ல்லை. ஏதோ ஒரு வகை­யில் பலத்த அடி­யொன்று விழும்­போது இவ­ரது கண்­க­ளும் திறக்­க­லா­மென்று எதிர்­பார்க்க முடி­யும்.

ஒன்­றி­ணைந்து செயற்­ப­டா­த­தால் 

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் பாட­ம் 

கற்­றுக் கொண்ட தமிழ்க் கட்­சி­கள்

தமி­ழர்­கள் தம்­மி­டையே கன்னை பிரிந்து நிற்­ப­தால் ஏற்­பட்ட நட்­டத்தை உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடிவு வெளி­யா­ன­போது கண்­டோம். உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளில் அதிக ஆச­னங்­க­ளைப் பெற்­றி­ருந்­தும் ஆட்­சி­ய­மைக்க முடி­யாத நிலை அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு ஏற்­பட்­டது. இரண்டு சபை­க­ளில் கஜேந்­தி­ர­கு­மா­ருக்­கும், இந்த அனு­ப­வம் கிடைத்­தது.

இதன் பின்­ன­ரா­வது தமி­ழர்­கள் ஐக்­கி­யப் படு­வ­தன் முக்­கி­யத்­து­வத்தை அவர் உண­ரா­மல் இருப்­பது மகா தவ­றா­கும். நாட்­டின் அர­சி­யல் சூழ்­நி­லை, எந்த வகை­யில் பார்த்­தா­லும் தமி­ழர்­க­ளுக்கு விரோ­த­மா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. பெரும்பான்­மை­யின அர­சி­யல் வாதி­கள் தமது இனத்­தைப் பற்­றியே சிந்­திக்­கி­றார்­கள்.

அந்த இனத்­தைச் சேர்ந்த மக்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெறு­வதே இவர்­க­ளது பிர­தான நோக்­க­மா­க­வும் காணப்­ப­டு­கி்ன்­றது. இதற்­காக எதைச் செய்­வ­தற்­கும் இவர்­கள் தயா­ரா­கவே உள்­ள­னர். குறிப்­பாக சிறு­பான்மை இனத்­த­வர்­களை ஒரு பொருட்­டா­கவே இவர்­கள் மதிப்­ப­தில்லை. தமிழர்களுக்கு நெருக்­க­டி­யைக் கொடுப்­ப­தன் மூல­மா­கத் தமது வாக்கு வங்­கியை அதி­க­ரிக்க வைத்­துக் கொள்­வதே இவர்­க­ளது பிர­தான நோக்­க­மா­கும்.

இனப் பிரச்­சி­னைக்கு இது­வரை தீர்வு காணப்­ப­ட­வில்லை. போரி­னால் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளின் அவ­லங்­கள் தொடர்­க­தை­யா­கவே ஆகி­யுள்­ளது. புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் கிடப்­பில் போடப்­பட்ட நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது. வடக்­கை­யும் கிழக்­கை­யும் மீண்­டும் இணைப்­ப­தற்­கான அறி­குறி எத­னை­யும் காண முடி­ய­வில்லை.

ஆனால் தமக்­குள் அர­சி­யல் நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­து­வ­தி­லும், அவற்­றுக்­குத் தாமா­கவே தீர்வு காண்­ப­தி­லும் இவர்­கள் ஈடு­பட்டு நேரத்தை விர­யம் செய்து வரு­கின்­ற­னர். இந்த நிலை­யில் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பா­கச் சி்ந்திப்­ப­தற்கு இவர்­க­ளுக்கு நேரம் கிடைப்­ப­தில்லை.

கடந்த காலத்­தில் இடம்­பெற்ற அர­சி­யல் செயற்­பா­டு­களை மறந்து தமி­ழர்­கள் ஒற்­று­மை­யாக, ஒரே அமைப்­பின் கீழ் செயற்­ப­டு­வதே அவர்­க­ளின் எதிர்­கா­லத்­துக்கு நல்­லது. ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒவ்­வொரு திசை­யில் நின்று கொண்டு மோதிக்­கொள்­வ­தால் எதி­ரி­தான் நன்மை அடை­வான். தமி­ழர்­களை நசுக்­கு­வ­தும் அவ­னுக்கு இல­கு­வா­கி­வி­டும்.

அதி­கா­ரம் எது­வுமே இல்­லாத எதிர்க் கட்­சித் தலை­வர் பத­வி­யைக்­கூ­டத் தமி­ழர் ஒரு­வர் வகிப்­ப­தைப் பொறுக்க முடி­யாத இன­வா­தி­கள், தமி­ழர்­க­ளுக்கு எதை­யும் செய்­யப் போவ­தி்ல்லை. தமிழ்த் தலை­வர்­கள் இதை உணர்ந்­தால் அதுவே போதும்.