Mar 10

போதைப்பொருள் வலையப்பு; சந்தேகநபர்கள் 5பேர் கைது

கிரேண்டபாஸ் பொலிஸ் பிரிவிற்குபட்ட மஹாவத்த பகுதியில் மீட்கப்பட்ட 20 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள், சுமார் 80 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் பிரபல போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரை ஊடாக நாட்டிற்குள் கடல் மார்க்கமாக கொண்டுவரப்படும் ஹெரோயின் போதைப்பொருளை நாடளாவிய ரீதியில் விநியோகம் செய்யும் முக்கிய வலையமைப்பே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேசத்திற்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, கிரேண்பாஸ் பொலிஸ் நிலையத்தின் சிறப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவே இவர்களை கைது செய்துள்ளதுடன் தற்சமயம் 7 நாள் தடுப்பு காவலின் கீழ் அவர்களை விசாரித்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.