May 17

வண்ணமயமான ஆடையுடன் பிரான்ஸை கலக்கிய தீபிகா படுகோனே

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முதல் முறையாக 70வது கேன்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் இன்று (17-05-17) கலந்து கொள்கிறார்.

ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டில் சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 70வது கேன்ஸ் திரைப்பட விழா இன்று முதல் (17-05-17) வரும் 28ம் தேதி வரை நடக்கயிருக்கிறது.

இதில் பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர் ஆகியோர் ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரெடியாக இருக்கிறார்கள்.இவர்களுடன் இணைந்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முதன் முறையாக கேன்ஸ் விழாவின் ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

அதற்காக இப்போதே தன்னை தயார்படுத்திக் கொண்டார். அந்த வகையில் மும்பையிலிருந்து கிளம்பிய தீபிகா, அழகான ஆடை அணிந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் சென்றடைந்த தீபிகா மேக்கப் பெண்மணியின் உதவியுடன் வண்ணமயமான ஆடை அலங்காரத்துடன் பிரான்ஸ் நாட்டையே அதிர வைக்கிறார். அதுமட்டுமல்லாமல், இன்னும் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொள்ளவில்லை. அதற்குள்ளேயே பிரான்ஸ் நாட்டை கலக்க ஆரம்பித்துவிட்டார்.