Feb 28

சுவிஸில் நிலவும் கடுங்குளிர்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

சுவிட்சர்லாந்தில் நிலவும் கடுங்குளிரில் இருந்து விலங்குகளை காப்பதற்காக அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சுவிட்சர்லாந்தில் கடந்த சில வாரங்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது.

இந்த வெப்பநிலையில் இருந்து சரணாலயத்தில் இருக்கும் சில விலங்குகள் தன்னை தானே காத்துக்கொள்ளும் நிலையில் சில விலங்களுக்கு தனி கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக சூரிச் சரணாலய அதிகாரி ராபர்ட் ஜிங் தெரிவித்துள்ளார்.Anteaters, Gorillas, Orang-Utans போன்ற விலங்குகள் வெளியில் வராமல் இருந்துவிடும் நிலையில் யானைகள் மட்டும் குளிரில் நடமாடுவதாக ராபர்ட் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், யானையின் காதுகளுக்கு கடும் குளிரை தாங்கும் ஆற்றல் கிடையாது. இயற்கையாகவே மிகவும் லேசான காதுகளை கொண்ட யானை போன்ற விலங்குகளை வெளியில் நடமாட விடாமல் பராமரித்து வருவதாகவும் விலங்கின ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், சுவிஸின் பல முக்கிய மாகாணங்கள் பனிப்பொழிவில் சிக்கித் தவிக்கின்றன.

நேற்றைய நிலவரப்படி Graubünden மாகாணத்தில் -26.5C, Zurich-இல் -11.1C, Bern-இல் -10.9C பதிவாகியுள்ளது.மேலும், சுவிஸ் முழுவதும் இன்று அதிகபட்ச வெப்பநிலை -5 டிகிரிக்கும் குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.