Feb 27

2017 தரம் 5(Gr 5)மாணவர்களுக்கு கனேடியத் தமிழர் அறக்கட்டளையின் நிதியில் நடாத்தப்பட்ட ஊக்குவிப்புத் திட்டத்தின் பெறுபேறுகள் குறித்த EDS வழங்கிய ஓர் ஆய்வு

2017 ம் ஆண்டு ஏப்பிரல் தொடக்கம் ஆவணி வரை தமிழ்ப் பகுதிகளிலிருக்கும் மிகவும் பின் தங்கியபாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான ஊக்குவிப்பு வகுப்புகளை நாம் நடாத்தியது பற்றிய செயதி. விபரம் வருமாறு.

மாவட்டம் கல்வி வலயம் பிரதேசப்பிரிவு பாடசாலைகள் பயனாளிகள்கிளிநொச்சி கிளிநொச்சி பூநகிரி 24 - 606

மட்டக்களப்பு கல்குடா கோறளைப்பற்று வடக்கு 19- 548

திருக்கோவில் திருக்கோவில் பொத்துவில்ரூ  திருக்கோவில் 28 693 

ஆலையடிவேம்பு

மொத்தம்: 71 1840

இப் பயனாளிகளை இனம் காணும் பொருட்டு எம்மால் ஒரு பொதுத் தேர்வு (மாதிரிப் பரீட்சை) எல்லாப் பாடசாலைகளிலும்

பாடசாலை நிர்வாகங்களின் உதவியோடு நடத்தப்பட்டது. பெறுபேறுகள் நுனுளு அமைப்பினரால் தமது தொழில்சார் ஆய்வு

முறைகள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு வழஙகப்படவேண்டிய பயிற்சி ஆவணங்கள் கணிதம்ரூ  விஞ்ஞானம் இரண்டிற்கும்தயாரிக்கப்பட்டன. இதை நடைமுறைப்படுத்த அவசியமேற்பட்டபோதெல்லாம் ஆசிரியர்களுக்கு கருத்தரங்குகளும் நடாத்தப்பட்டது.

மாவட்டத்திலிருக்கும் திறமை வாய்ந்த வளவாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கும் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டன. வார இறுதிநாட்களில் தெரிவு செய்யப்பட்ட கொத்தணி நிலயங்களில் மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்றன.2017 க்கான உத்தியோகபூர்வமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்ற பின் இவை பகுப்பாய்வு செய்யப்பட்டு சிலபரிந்துரைகளும் நுனுளு அமைப்பினரால் தரப்பட்டுள்ளன.

1) கிளிநொச்சி- பூநகிரி பிரதேசம்:

சென்ற வருட முடிவுகளோடு ஒப்பிடுகையில்

வருடம் தோற்றியோர் சித்தி 70 புள்ளிகளுக்கு 100 புள்ளிகளுக்கு சித்திபெற்ற

தொகை மேல் மேல் பாடசலைகள்

2016 668 13 285 (42.7 மூ ) 130 (19.4மூ ) 08

2017 598 21 366 (61.3 மூ ) 171 (29 மூ) 09

அவதானிப்பு: சென்ற வருடத்தை (அதற்கு முன்புகூட) விட பெறுபேறுகள் உயர்வாக இருந்காலும் வரவு குறைவாயும்  

ஏறத்தாள 60 மூ ஆன பாடசாலைகள் வினைத்திறன் கூடிய மாணவர்களை உருவாக்கும திறன் குறைந்ததாகவும் அவதானிக்கப்பட்டது.

2) திருக்கோவில் கல்வி வலயம்:

வருடம் தோற்றியோர் சித்தி 70 புள்ளிகளுக்கு

தொகை மேல்

2016 1270 122 842 (66 மூ )

2017 1077 104 622 (57.1 மூ )

அவதானிப்பு: கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இவ் வருடம் பெறுபேறுகள் திருப்தியளிக்கவில்லை. பரீட்சைக்குத்

தோற்றும் மாணவர் தொகை குறைந்து வருவதை அவதானிக்கலைம். கல்விக் கோட்ட அதிகாரியின் ஒத்துழைப்பு போதுமானதாகஇருக்கவில்லை. பழங்குடி மக்கள் வாழும் பிரதேசமான அலிக்கம்பை புவுஆளு பாடசாலைமூலம் முதன் முதலாக 105 புள்ளிகளைப்பெற்று ஒரு மாணவன் சித்தி பெற்றதுடன்ரூ  இன்னுமொருவர் வெட்டுப்புள்ளியை அண்மித்தது சிறப்பாகும். ஆசிரியைதிருமதி நிதா பிரனித் அவர்களின் பணி பாராட்டுக்குரியது.

3) கல்குடா கல்விவலயம்:

வருடம் தோற்றியோர் சித்தி 70 புள்ளிகளுக்கு

தொகை மேல்

2016 2399 114 974 (40.6 மூ )

2017 2317 125 911 (39.3 மூ )

அவதானிப்பு: கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் சித்திபெற்றோர் தொகை அதிகரித்தாலும் 70 புள்ளியை அடைந்தோர்

விகிதம் குறைந்துவிட்டதை அவதானிக்கலாம். வாகரை கல்விக்கோட்டத்தில் உள்ள 19பாடசாலைகளில் 5 பாடசாலைகளே மாணவர்களை

புலமைப்பரிசில் சித்தியடையச ;செய்திருக்கின்றன. பாடசாலைகள் நீண்ட இடைவெளிகளில் அமைந்துள்ளதால் மாணவர்களைகொத்தணி நிலையங்களுக்கு வரச்செய்வதில் பின்னடைவு எற்பட்டது. வாகரை கோட்ட ஆரம்பப்பிரிவு கல்வி ஆலோசகர்திருமதி. அருள்நேசராசா அவர்களின் ஒத்துளைப்பு இருந்தும் ஆசிரியர்களின் கற்பித்தல் தேரச்சி போதாமையும் ஒருகாரணமாகும். ஆசிரியர்களின் கற்பித்தல் தொழில்நுட்பம் அதிகரித்தல் அவசியமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எமது கணிப்பும் எதிர்கால முன்னெடுப்பும்.:

நாடுதளுவிய தரவுகளின்படி  வன்னி மற்றும் கிழக்கு மாகாணங்களில்ரூ  சில நகர்ப்புறங்களைத் தவிர ஏனைய பகுதிகளகல்வித்தரத்தில் மிகவும் பின் தஙகிய நிலையிலேயே இருரப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. பலகாலமாக இவை போதியகவனத்துக்குள்ளாகவில்லை.

இந் நிலையால் இப்பகுதி ஏழ்மை நிலையிலும் தொடர்ந்து காணப்படுகிறது. அடிப்படை வசதிகள்கூடஇல்லாத பல குடியிருப்புகள் இப் பிரதேசங்களில் உள்ளன. போராட்ட காலங்களில் கூடுதலாக பங்கெடுத்து தற்போதுபெரும்பாலும் கைவிடப்பட்டவர்களாகவே இவர்கள் வாழந்து கொண்டிருக்கிறார்கள்.

கனடாவிலிருந்து சென்று இப்படியானபிரதேசங்களில் தன்னாலான மேம்படுத்ல்களை செய்துவரும் தனிப்பட்ட ஒருவரிடமிருந்தும் இது பற்றி அறிய முடிந்தது.

சமூகம் ஒன்று முன்னேறுவதற்கு கல்வியே பிரதான தேவையாகும். ஓரு குடும்பத்திலிருந்து ஒருவருக்காவது படிப்பறிவை ஊட்டமுடிந்தால் அக்குடும்பமே முன்னேறுவதற்கு உதவியதாக இருக்கும் என்பது கனேடியத் தமிழர் அறக்கட்டளையின் கருத்தாகும்.

அதிலும் சிறு வயதில் அந்த திருப்பத்தை ஏற்படுத்த முடிந்தால் சிறந்ததாகும். இதை அடிப்படையாக கொண்டுதான் நாம் இந்ததிட்டத்தை முன்னெடுத்தோம்.

இத் திட்டத்தின் பயன்களைக் கண்ட மேலும் பல பாடசாலை அதிபர்கள் இதில் இணைய விண்ணப்பித்திருக்கிறார்கள். 2018 ம்ஆண்டுக்கு ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் பற்றி நுனுளு தெரிவித்த விபரத்திலிருந்து :

“.....கனடாத் தமிழர் அறக்கட்டளை நிதியத்தின் நிதி அனுசரனையுடன் வாகரை  ரூடவ்ச்சிலம்பற்றுமொனராகலை அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட மூதூர்க் கிழக்குப் பிரதேச பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டத்தைஅதிகரித்தலுக்கான செயல்திட்டத்தை இம்மாதம் முதல் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் முன்னெடுக்க உள்ளது.

இதன்மூலம் 55 பாடசாலைகளின் 1010 மாணவர்கள் நேரடியாகப் பயன்பெற உள்ளார்கள். முதற்கட்டமாக மாதாந்த பயிற்சிப்பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் இவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து வடமாகாணத்தில் கிளிநொச்சிரூபவ் முல்லைத்தீவுரூபவ் மன்னார்ரூபவ் மடுரூபவ் துணுக்காய்ரூபவ் வவுனியா வடக்கு ஆகிய கல்விவலய மாணவர்களுடன் கிழக்கில் மூதூர்ரூபவ் கல்குடாரூபவ் மட்டக்களப்பு மேற்குரூபவ் திருக்கோவில் கல்வி வலயங்களில் உள்ள 566பாடசாலைகளின் ஏறத்தாழ 12ரூபவ்500 மாணவர்களுக்கு இச்செயல்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது..........”

2017ல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாணக் கல்விஅமைச்சுகள் வலயக் கல்வி அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள்ஆசிரியர்கள் என் எல்லோருமே மிகவும் ஆர்வத்துடனும் இம் மாணவர்கள் மேல் கொண்ட அக்கறையினாலும் மிகப் பெரியஉழைப்பை வழங்கி ஒத்துழைப்பு கொடுத்ததனாலேயே நுனுளு அமைப்பினர் இத்திட்டத்தை நிறைவேற்றக்கூடியதாக இருந்ததுஎன்பதுதான் உண்மை. கனேடியத்தமிழர் அறக்கட்டளை எமது கொடையாளிகளின் சார்பாக இவர்கள் எல்லோருக்கும்வாழ்த்துக்களையும் மனமார்ந்த நன்றிகளையும் இத்தால் தெர்வித்துக்கொள்கிறது.

இம்முறை வன்னியிலும் கிழக்கு மற்றும் மலையகம் பகுதிகளிலிருந்து மேலும் பல பாடசாலைகள தம்மை இணைக்குமாறுவிண்ணப்பித்திருப்பதால் இது ஒரு பாரிய முயற்சியாகும். இத்திட்டத்திற்கு கொடையளிகள் மனமுவந்து பங்களிக்கவேண்டுமெனகனேடியத்தமிழர் அறக்கட்டளை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

சிறுதுளிகளாயினும் அவை சேரும்போது பெரும்பயனைக்கொடுக்கும். இதேபோல் வடக்கு  கிழக்கு மலையக கல்வி அமைச்சுகளினதும் அதிகாரிகளினதும் உதவிகளையும் கனேடியத் தமிழர்அறக்கட்டளை பணிவுடன் வேண்டிநிற்கிறது.