Feb 26

திரு. பற்றிக் பிறவுன் இல்லாத நிலை வந்தால்? அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்விற்காகத் தயாராகும் தமிழர்கள்!

பற்றிக் பிறவுன் அவர்களின் தலைமைத்துவத்தின் போது அவரது தங்கைமார் இருவரும், தாயருமே அவருடைய குரலாக ஒலித்து வந்தார்கள். செயற்பட்டார்கள்.

இருந்தபோதும் கிடைக்கப்பெறுகின்ற தகவல்களின் பிரகாரம் அவரது தாயார் தனது மகனிற்கு ஏற்படுத்தப்பட்ட அவதூறுகள் போன்றவற்றால் மிகுந்த சுகநலமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இது அவரது குடும்பஞ்சார் நடவடிக்கைகளில் மிகவும் பாதிப்பானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், தன்னால் தான் இவ்வாறானதொரு நிலை தனது குடும்பத்தாருக்கு ஏற்பட்டதாக பற்றிக் பிறவுன் கவலையடைந்துள்ளதாகவும் மூன்றாம் தரப்பால் தெரிவிக்கப்பட்டாலும் இது குறித்த உண்மையான தகவல்கள் தெரியவரவில்லை.

இருந்தபோதும், அதிகமான தமிழர்களை வாக்காளர்களாகக் கொண்டுள்ள வேட்பாளர்களையும், வேட்பாளர் தெரிவிற்கு தயாராகவுள்ளவர்களையும் கொண்டுள்ள தமிழர்கள் 32 தொகுதிகளில் முடிவெடுக்கும் சக்திகளில் ஒரு பங்கினராக உள்ளனர்.

32 தொகுதிகளில் முடிவெடுக்கும் அங்கத்துவ இனக் குழுமங்களில் ஒண்றாகத் திகழும் தமிழர்களின் வாக்குப்பலம் இந்தத் தேர்தலின் போது பாரிய அக்கறையை இதர வேட்பாளர்களிடமிருந்து பெற்றுள்ளது. அவர்கள் தாங்கள் எங்களை அரவணைப்பதற்கான சமிக்ஞ்சைகளை ஏற்கனவே வெளிப்படையாகக் காட்டியுள்ளார்கள்.

குறிப்பாக மூன்று வேட்பாளர்கள் முன்நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்கள். தமிழர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு பாரிய வெற்றி.

எனவே அடுத்த நடவடிக்கை குறித்த முடிவை எடுக்கும் பொறுப்பையும், பேச்சுவார்த்தைகளில் தமிழர்களிற்கான வெற்றிகளைப் பெறும் பொறுப்பையும் இணைத் தலைவர்களிற்கும் போசகரிற்குமான தெரிவாக அங்கத்துவர்கள் விட்டுள்ளனர்.

ஐந்து இணைத்தலைவர்களும், போசகர்களும் ஒவ்வொரு வேட்பாளருடனும் பேசி சமுதாயத்திற்கு அதிகமான நன்மைகளை தருவதாக ஒப்புக் கொள்ளும் தரப்புடன் இணைந்து செயலாற்றுவார்கள்.

இதற்கான காரணம் அங்கத்துவர்கள் அனைவருமே அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிவதற்குத் தயாராக இருக்கின்றார்கள். அவர்களது பலம் உள்ளவரை நிட்சயமாக தமிழர்கள் சார்ந்த வெளிப்படையாக நன்மைகளைத் தரும் முடிவுகளை எடுக்க முடியும்.

அதனை இணைத்தலைவர்களும், போசகரும் கூடி ஆராய்ந்து அங்கத்துவர்களின் பார்வைக்குச் சமர்ப்பிப்பார்கள். அங்கத்துவர்வர்களின் ஆமோதிப்பின் படி அடுத்த கட்ட நடவடிக்கைத் தொடரும்.