Feb 26

தலைமைத்துவத் தேர்தல் - பற்றிக் பிறவுனின் பிரச்சாரத்திற்கான தமிழ் இணைத் தலைவர்கள் தேர்வு

திரு.பற்றிக் பிறவுனின் தலைமைத்துவத் தேர்தல் பணிகளிற்கான இணைத்தலைவர்கள் இன்று நடைபெற்ற அங்கத்தவத்துவர்கள் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் பிரகாரம் இணைத்தலைவர்களாக:

கலாநிதி தா. வசந்தகுமார்

செல்வி கேதிகா லோகன்

திரு. அகஸ் ரீன் ஜெகநாதன்

திரு. சாண் தயாபரன்

செல்வி. தேனுசா பரணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

போசகராக கலாநிதி ஜோசன் சந்திகாந்தான் அடிகளார் தெரிவு செய்யப்பட்டார்.

தற்போதைய சூழ்நிலையில் திரு.பற்றிக் பிறவுனிற்கு மிகவும் ஆதரவான நிலை காணப்படுவதையும், ஏனைய தலைமைத்துவ வேட்பாளர்களிற்காக கட்சியில் இணைந்த தமிழர்கள் கூட திரு. பற்றிக் பிறவுனிற்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக அவர் மீதான அனுதாபம் கொண்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளதாகவும் அங்கு கருத்துத் தெரிவித்த பலரும் தெரிவித்திருந்தனர்.

பற்றிக் பிறவுனின் நெருங்கிய நண்பரான திரு.பாபு நாகலிங்கம் நடைபெற்ற சம்பவங்களின் உண்மைச் சம்பவங்களாகத் தனக்குத் தெரிந்தவற்றை எடுத்துரைத்தார். பாபு நாகலிங்கமே மாகாணத்திற்கான தலைமை பிரச்சாரப் பொறுப்பாளராக பற்றிக் பிறவுன் சார்ந்த அணியால் நியமிக்கப்பட்டுள்ளார்

திரு.சப்தன் தியாகராஜா இனிவரும் 5 நாட்களும் எவ்வளவு முக்கியமானவை என்பதையும், எவ்வாறாக அங்கத்துவர்கள் தங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பதையும் விளக்கிக்கூறினார்.