Feb 26

உள்ளக கருத்துக் கணிப்பில் திரு. பற்றிக் பிறவுன் முன்னிலையில் - நசனல் போஸ்ற்.

உள்ளகக் கருத்துக் கணிப்புக்களின் படி கடந்த மூன்று தினங்களாக இடம்பெறற கருத்துக் கணிப்பீடுகளின் பிரகாரம் போட்டியில் கடைசியாக குதித்த திரு. பற்றிக் பிறவுன் முதற்கட்டத் தெரிவாக முன்னிலை பெறுவதோடு,

இரண்டாம் தெரிவு யாருக்கு என்ற வாக்குக் கணிப்பில் பற்றிக் பிறவுன், கிறி ஸ்ரீன் எலியட், டக் போட் ஆகியோருக்கு தலா 25 வீத வாக்குக்கள் கிடைக்கப் பெறும் என்றும் கரோலின் மல்ரோனிக்கு 19 வீத ஆதரவு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்புக்களின் பிரகாரம் பற்றிக் பிறவுன் இறுதியாக போட்டியில் குதித்தாலும், அவருக்கு இரு வாரங்களிற்கு முன்னரே போட்டியில் இறங்கிய கிறஸ்ரீன் எலியட் அவர்களை முந்திச் செல்வதையும், டக் போட் மூன்றாம் இடத்திலும், கரோலின் மல்ரோனி நான்காம் இடத்திலும், ரான்யா அலன் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றார்கள்.

போட்டியில் குதித்த ஒரு வார காலம் முடிவதற்குள்ளேயே முன்னணி நிலையை கருத்துக் கணிப்பில் திரு.பற்றிக் பிறவுன் அவர்கள் அடைந்துள்ளமை ஆரோக்கியமாகப் பார்க்கப்பட்டாலும், தேர்தல் நடைமுறைகளானது மிகவும் இறுக்கமானதாக இருப்பதால் ஒன்றாராறியோவின் இதர பாகங்களில் வசிக்கும் முதியவர்களின் கணணி மூலமான வாக்குக்கள் பதிவு என்பது மந்த நிலைமையை அடையலாம் என்றும் அது வாக்கு விகிதாசாரத்தில் பாரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும் பலராலும் நம்பப்படுகின்றது.

ஏனென்றால் வாக்களிப்பதற்கான தகுதியை அடைவதற்கு அங்கத்துவர்கள் தங்களுடைய அடையாள அட்டையை இலத்திரனியல் படியாக்கி அதனை கட்சியின் இணையத்தில் தரமேற்ற வேண்டும். அத்தோடு தனித்தன்மை பேணும் அங்கத்துவர்கள் கூட தங்களுடைய அங்கத்துவத்தை அடையாள அட்டையை இலத்திரனியல் படியாக்கி கட்சியின் இணையத்தில் தரமேற்றுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.