Feb 25

சம்­பந்தன் சுமந்­தி­ர­னுக்கு ‘இறு­திக்­கி­ரியை’ நடாத்திய காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வுகள்..!

வவு­னி­யாவில் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வு­களால் முச்­சந்­தியில் வைத்து சம்­பந்தன் சுமந்­தி­ர­னுக்கு இறு­திக்­கி­ரி­யைகள் செய்­யப்­பட்­டன. மேலும், வவு­னியா கந்­த­சாமி கோவிலில் வழி­பா­டு­களில் ஈடு­பட்ட காணாமல் ஆக்­கப்­பட்­ட­டோரின் உற­வி­னர்கள் ஆல­யத்தின் முன்­பாக ஒன்­று­கூடி பதா­கை­களில் பொறிக்­கப்­பட்­டி­ருந்த தமது பிள்­ளை­களின் புகைப்­ப­டங்­களைப் பார்த்து ஒப்­பாரி வைத்து அழு­தனர்.

இத­னை­ய­டுத்து கோவி­லுக்கு முன்­பாக இருந்து கடை வீதி வழி­யாக ஊர்­வ­ல­மாக வந்த உற­வுகள் தாம் போராட்­டத்தில் ஈடு­படும் இடத்­திற்கு வருகை தந்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இத­னை­ய­டுத்து எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தர் மற்றும் சுமந்­தி­ரனின் உருவ பொம்­மை­களைத் தாங்­கி­ய­வாறு முச்­சந்தி நோக்கி சென்ற அவர்கள் அங்கு வைத்து இறு­திக்­கி­ரி­யை­களை இரு உரு­வப்­பொம்­மை­க­ளுக்கும் முன்­பாக செய்­தனர்.

இந் நிலையில் போராட்ட தளத்­திற்கு அரு­கிலும் நகர்ப்­பு­றத்தில் உள்ள வர்த்­தக நிலை­யங்­க­ளிலும் முச்­சக்­க­ர­வண்­டி­க­ளிலும் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.