Feb 24

மன்னாரில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் குடும்பங்களுடன் கச்சதீவுக்குப் பயணம்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் படகுகள் மூலம் பயணமாகியுள்ளன.

தலைமன்னார், பேசாலை, பள்ளிமுனை, கோந்தைப்பிட்டி கடற்பகுதியூடாக மக்கள் படகுகள் மூலம் கச்சதீவை நோக்கி பயணமாகியுள்ளனர். இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் தெரிவித்தார். 

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று இடம் பெறவுள்ளன. நேற்றையதினம் கொடிதினத்துடன் திருவிழா ஆரம்பமானது.