Feb 24

மலையக ரயில் சேவைகள் தொடர்ந்தும் பாதிப்பு

நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ​நேற்று மாலை ரயில் தடம்புரண்ட புகையிரத ​சேவை இன்னும் வழமைக்கு திரும்பவில்லை. இதனால் மலையகத்திற்கான புகையிரத சேவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டது. 

இதனால் அந்த ரயில் பயணிகளை வேறொரு ரயிலுக்கு மாற்றி அனுப்பி வைத்ததாக நானுஓயா புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். 

எவ்வாறாயினும் புகையிரத சேவையை இன்று மதியத்திற்குள் முழுமையாக வழமைக்கு கொண்டு வர முடியும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.