May 17

அமைச்சர் ஜெயக்குமார் சூப்பர் டூப்பர் முதல்வராக செயல்படுகிறார் : மு.க.ஸ்டாலின்

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக சென்னை விமான நிலையத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் சூப்பர் டூப்பர் முதல்வராக செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்று ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்திற்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.