Mar 10

தீவிரத்தை ஒடுக்க அமெ.தலைமையில் 68நாடுகள் கூட்டம்

உலகம் முழுவதும் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளதோடு அதை எதிர்க்கும் நாடுகள் மீது தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். 

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்தொழிப்பது எப்படி? என்பது தொடர்பாக புதிய செயல் திட்ட அறிக்கை தயாரிக்குமாறு அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனுக்கு கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரால் அழிவுகளை ஏற்படுத்தும் ஐ.எஸ்., அல் கொய்தா, போகோஹரம் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை  இல்லாதொழிக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்து அமெரிக்காவில் 68 நாடுகள் கூடி அவசர ஆலோசனை நடத்தவுள்ளன.