Feb 23

2018 ஹோன்டா சி.பி. ஷைன் எஸ்.பி. இந்தியாவில் வெளியானது

இந்தியாவில் 2018 ஹோன்டா சி.பி. ஷைன் எஸ்.பி. வெளியிடப்பட்டுள்ளது. 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஷைன் மோட்டார்சைக்கிள் பஜாஜ் டிஸ்கவர் 125 மற்றும் ஹீரோ கிளாமர் FI உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. 

2018 ஹோன்டா சி.பி. ஷைன் எஸ்.பி. மாடலில் ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் 124.73 சிசி இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 10.16 பி.ஹெச்.பி. பவர் @7500 ஆர்.பி.எம்., 10.30 என்.எம். டார்கியூ @5500 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் டேன்க் 10.5 லிட்டர் கொள்ளளவு கொண்டிருக்கிறது. 

புதிய சி.பி. ஷைன் எஸ்.பி. மாடலில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின் ஷாக் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் 130 எம்.எம். டிரம் பிரேக், மற்ற இரண்டு வேரியண்ட்களில் டிரம் பிரேக் மாற்றாக 240 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டிருக்கிறது.

இத்துடன் 18 இன்ச் அலாய் வீல், மற்றும் 80-செக்ஷன் லோ-ரெசிஸ்டண்ட் டையர்கள் வழங்கப்பட்டுள்ளது.  புதிய சி.பி. ஷைன் எஸ்.பி. மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. புதிய வடிவமைப்பு கொண்ட ஃபியூயல் டேண்க், புதிய கிராஃபிக்ஸ், மேம்படுத்தப்பட்ட செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரில் சர்வீஸ் இன்டிகேட்டர் மற்றும் கடிகாரம் உள்ளிட்டவை கொண்டுள்ளது.

ஹோன்டா சி.பி. ஷைன் எஸ்.பி. பிளாக், அக்லெடிக் புளூ மெட்டாலிக், இம்பீரியல் ரெட் மெட்டாலிக், ஜெனி கிரே மெட்டாலிக் மற்றும் பியல் சைரன் புளூ என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஹோன்டா சி.பி. ஷைன் எஸ்.பி. விலை ரூ.62,032 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.