Feb 23

வடக்கு மாகாண கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும்

வடக்கு மாகாணத்தின் நிதியில் ஆண்டிற்கு 200 மில்லியன் ரூபா நிதி  ஊதியம் என்னும் பெயரில்  167 ஆசிரியர்களிற்கு புத்தளம் மாவட்டத்திற்கு  கடந்த 4 ஆண்டுகளாக செல்லும் விடயத்திற்கு  தீர்வை எட்டமுடியாத நிலையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு கானப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வடமாகணப் பாடசாலைகள் யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்து புத்தளத்துல் இயங்கிய நிலையில் தற்போதுவரையில்  6 பாடசாலைகள்  புத்தளத்திலேயே தொடர்ந்தும்  இயங்கும் நிலையில் அதற்கான சகல கொடுப்பனவுகளும் இன்றுவரையில் வடக்குமாகாண ஒதுக்கீட்டில் இருந்தே செல்கின்கின்றது. இதனால் குறித்த பாடசாலைகளை  நிரந்தரமாக புத்தளத்துடன் இணைப்பதற்கான பேச்சுக்கள் பல தடவை  இடம்பெற்றபோதும் அதற்கான பணிகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.  

மன்னார் கல்வி வலயத்தின் கீழ் செயல்படும் பாடசாலைகளே தற்போது வரையில் புத்தளத்தில் இயங்குகின்றன. அவ்வாறு இயங்கும் பாடசாலைகளை மீளத் திரும்புமாறு கடந்த 4 ஆண்டுகளாக  பல தடவை கோரிக்கை விடுத்தும்  திரும்பாத காரணத்தினால் அவர்களை நிரந்தரமாகவே புத்தளம் மாவட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாக அப் பாடசாலைகளை வயம்ப மாகாண கல்வி அமைச்சின் கீழ் இணைக்க ஓர் இணக்கமும்  கானப்பட்டது. அவ்வாறு கானப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் அப் பாடசாலைகளையும் அங்கே கற்பித்தல் பணியில் உள்ள ஆசிரியர்களையும் நிரந்தரமாகவே வயம்ப மாகாணத்துடன் இணைக்கும் முயற்சி இடம்பெற்றது. 

இதன் அடிப்படையில்  குறித்த பணிகள் கடந்த  ஆண்டின் ஒக்டோபர் மாத்த்தில்  முழுமை பெறும் என  கல்வி அமைச்சின் செயலாளரும் தெரிவித்தார். இருப்பினும் மேற்படி பணிகள் எவையும் இதுவரை இடம்பெறாதமையினால் குறித்த பாடசாலைகளில் பணிபுரியும்  167 ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட சகல செலவுகளும் 2018ம் ஆண்டும் வடக்கு மாகாணத்தின் ஒதுக்கீட்டில் இருந்தே வழங்கப்படுகின்றது.

இதனால் குறித்த 167 ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட பணிக்காக ஆண்டுதோறும் வடக்கு மாகாண சபையின் 200 மில்லியன் ரூபா  பணமே செலவிடப்படுகின்றது. இதேநேரம் மேற்படி பாடசாலைகளை மீண்டும் வடக்கிற்கு கொண்டு வருவதற்காக 2014ம் ஆண்டு மற்றும் 2015ம் ஆண்டுகளில் அப்போதைய வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தலமையிலான குழுவினர் முயற்சித்த நிலையில் மேற்படி பாடசாலை ஆசிரியர்கள் 6 மாத காலம் மட்டுமே சந்தர்ப்பம் கோரியிருந்தனர். இதன் பின்னர். 2017ம் ஆண்டு ஆரம்பத்திலும் முயற்சித்தும் பலன் கிட்டவில்லை எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு ஓர் நிர்வாக ரீதியில் தீர்வை வழங்கெவதன் மூலம் ஆண்டிற்கு 200 மில்லியன் ரூபா மீதப்பனுத்தும் ஓர் செயல்பாட்டினையும் மாகாண சபை தனது 4 ஆண்டுகால செயல்பாட்டிலும் தவறவிடப்பட்டமையினால் நிதி வுரயம் மட்டுமன்றி நிர்வாக ரீதியிலும் பாதிப்புக்களை எதிர்கொள்வதோடு மன்னார் மாவட்ட மாணவர்களின் கல்வியிலும் பாதிப்படைவது தொடர்பிலும் வடக்கு மாகாண கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என மாகாண முதலமைச்சரிடமும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கெழுக் கூட்டத்திலும் தனித்தனியாக கோரிக்கை விடப்பட்டது.

இருப்பினும் இந்தக் கோரிக்கை தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரோ அல்லது முதலமைச்சரோ  4 ஆண்டுகளாக  எந்நவிதமான ஆக்கபூர.வமான நடவடிக்கையும் மேற்கோள்ளாத காரணத்தினால் இன்று புத்தளத்தில் கல்வி கற்கும் மானவர்கள் மன்னார் மாவட்டத்தின் வெட்டுப் புள்ளியில் பல்கலைக் கழகம் செல்லும் நிலையில் உண்மையிலேயே மன்னாரில் கல்வி கற்கும் மாணவர்கள் வீதியில் நிற்கின்றனர். இதனை சீர் செய்து எமது மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டாது பிற விடயங்கள் தொடர்பில் பேசுவது அர்த்தமற்ற விடயம் என்றார்.

குறித்த விடயத்தில் கல்வி அமைச்சராக இல்லாத காலம் முதல் அதிக கவனம் செலுத்தி குரல்கொடுத்தபோதும் இன்றுவரை தொடர் நடவடிக்கையிலேயே உள்ளது. இறுதியாகவும் கடிதப் பரிமாற்றத்திற்குட்பட்டதாகவே உள்ளது. 2017ம் ஆண்டு இறுதியுடன் நிரந்தரமாக புத்தளத்துடன் இணைக்க மேற்கொண்ட முயற்சி இதுவரை நிறைவுறவில்லை. இருப்பினும் இதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.