Feb 21

சுவிட்சர்லாந்தின் மிக முக்கியமான திருவிழா கோலாகலமாக தொடங்கியது

சுவிஸ் நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான திருவிழா பேசல் நகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் ”Morgestraich” எனப்படும் சுவிஸ் நாட்டின் முக்கிய திருவிழாவை கோலாகலமாக கொண்டாட கடந்த திங்கட்கிழமை அதிகாலை முதலே வீதிகளில் திரண்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையில் தெரு விளக்குகளை அணைத்துவிட்டு கொண்டாட்டத்தில் இறங்கினர்.

drey scheenschte Dääg” என அழைக்கப்படும் இந்த திருவிழா 72 மணி நேரம் நீடிக்கும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.நேற்று முன்தினம் தொடங்கிய இந்த திருவிழாவில் இசை வாத்தியங்கள் முழங்க, வண்ண வண்ண முக மூடிகளை அணிந்தவாறு புல்லாங்குழல் ஊதி ஒருவரை ஒருவர் மகிழ்வித்து விழாவைக் கொண்டாடினர்.

கேலி செய்து மகிழ்வதை முக்கியமானதாக கருதப்படும் இந்த திருவிழாவில் வட கொரியாவின் தாக்குதல் மிரட்டல்கள் மற்றும் நாட்டில் பெறும் விவாதம் ஆகியுள்ள பூச்சி உணவுகள் ஆகியவை இந்த வருடம் மக்களால் ”Morgestraich” திருவிழாவில் அதிக அளவு கேலி செய்யப்பட்டவை ஆகும்.சென்ற வருடம் பேசல் நகரில் நடைபெற்ற இதே திருவிழாவில் சுமார் இரண்டு லட்சம் மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.