Feb 20

மேக் கணினிகளில் இனி இயங்காதுபோகும் டுவிட்டர் டெஸ்க் டாப் அப்ளிகேஷன்!

உலகின் மிகப் பிரபலமான ட்விட்டர் நிறுவனமானது, மேக் கணினிகளில் டுவிட்டர் டெஸ்க் டாப் அப்ளிகேஷனை இனி பயன்படுத்த முடியாது என அண்மையில் தகவல் வெளியிட்டுள்ளது.


மேக் கணினிகளில் இனி இயங்காதுபோகும் டுவிட்டர் டெஸ்க் டாப் அப்ளிகேஷன்!


டுவிட்டர் நிறுவனமானது, அதன் சேவையை அனைத்துவிதமான ஓ.எஸ்களிலும் செயல்படும் வகையில் வெளியிட்டிருந்தனர். ஆனால் ஆப்பிள் கணினிகள் கொண்டுள்ள பயனர்கள் பெரும்பாலும் ட்விட்டர் செயலியைப் பயன்படுத்துவது கிடையாது என்பதாலும், அவர்கள் எதிர்பார்ப்பை இந்த டுவிட்டர் அப்ளிகேஷன் நிறைவேற்றவில்லை என்பதாலும் இனி மேக் பயனர்கள்(Mac users) அதைப் பயன்படுத்த முடியாது என்ற தகவலை டுவிட்டர் நிறுவனம் அதன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை (16.02.2018) முதல் மேக் பயனர்கள் ட்விட்டர் செயலியை ஆப்பிள் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய இயலாது.


அத்தோடு, மேக் கணினிகளுக்கான(Mac computer) டுவிட்டர் சப்போர்ட் 30 நாள்களில் நிறைவுறும் என்றும் டுவிட்டர் தெரிவித்துள்ளது. எனவே 30 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் மேக் பயனர்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடியுமா அல்லது புதிய அப்ளிகேஷன் வெளிவருமா எனப் பயனர்கள் ஆவலோடு உள்ளமை குறிப்பிடத்தக்கது.